திருவண்ணாமலை | அண்ணாமலையார் கோயிலுக்கு 750 கிராம் தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய பக்தர்
செய்தியாளர்: மா மகேஷ்
திருவண்ணாமலை குமரக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமார். அண்ணாமலையார் பக்தரான இவர், தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்துள்ளார். இதையடுத்து 750 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான மகரகண்டி என்று அழைக்கப்படும் மாலை.
வைர பச்சை கல் டாலர், மரகத பச்சை கல் டாலர், செம்பு கல் டாலர் உள்ளிட்ட நகைகளை, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி மற்றும் அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் பரணிதரன் ஆகியோரிடம் வழங்கினார்.
குமார் குடும்பத்தினர் ஒப்படைத்த மகரகண்டி மாலை மற்றும் வைரம், கெம்பு பச்சைக்கல் டாலர்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பஞ்ச மூர்த்தி வீதி உலாக்களின் போது அண்ணாமலையாருக்கும் அம்பாளுக்கும் சார்த்தப்படும். அண்ணாமலையார் பக்தரின் இந்த செயலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.