தாய், தந்தையை இழந்த பெண்ணுக்கு ஆட்சியர் கருணையால் அரசுப்பணி

தாய், தந்தையை இழந்த பெண்ணுக்கு ஆட்சியர் கருணையால் அரசுப்பணி

தாய், தந்தையை இழந்த பெண்ணுக்கு ஆட்சியர் கருணையால் அரசுப்பணி
Published on

தாய், தந்தையை இழந்து வறுமையால் வாடிவந்த பெண்ணுக்கு, குடும்ப நிலையை கருதி அரசுப்பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருவண்ணாமலையில் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று உதவிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கனிகிலுப்பை கிராமத்திற்குள் நுழைந்த மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை அனைவரும் பரபரப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த வாகனம் ஒரு சிறிய வீட்டின் முன்பு நின்றது. அந்த வீட்டிற்குள் நுழைந்த ஆட்சியர் கந்தசாமி, வீட்டின் மூத்த பெண்ணான ஆனந்தியையும், அவரது தம்பி, தங்கையையும் சந்தித்து பேசினார். அத்துடன் அவர்களுடனேயே ஆட்சியர் உணவு உண்டார். பின்னர் ஆனந்திக்கு சத்துணவு அமைப்பாளருக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

சத்துணவு உதவியாளராக இருந்த தாய் இறக்கும்போது ஆனந்தி பிளஸ் டூ படித்துவந்தார். தாயின் இறப்பை அடுத்து கடந்த ஆண்டு தந்தையும், கடந்த ஆகஸ்ட் மாதம் பாட்டியும் இறந்துவிட்டார். இதனால் வறுமை அந்தக் குடும்பத்தை ஆட்டிப்படைத்தது. இதையெல்லாம் கூறி கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம், கண்ணீருடன் ஆனந்தி மனு அளித்தார். இந்தக் குடும்பத்தின் நிலை உணர்ந்து மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்பேரில், 19 வயது ஆனந்திக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனந்தியின் தங்கை கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனந்தியும் தொலைதூரக் கல்வி படிக்க கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டு, இவர்களுக்கு வீடு கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. பணிநியமன ஆணை பெற்றுள்ள ஆனந்தி நேற்று முதல் கனிகிலுப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியில் சேர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com