தமிழ்நாடு
லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து ஒரு குடும்பத்தினர் மேல்மருவத்தூருக்கு தரிசனம் செய்ய காரில் சென்றனர். திருவண்ணாமலை அருகேயுள்ள ஒட்டக்குடிசல் என்ற இடத்தில் கார் சென்றபோது எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் காரில் சென்ற 2 பெண்கள் உள்பட 5 பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.