தமிழ்நாடு
திருச்சி: நீச்சல் குளத்தில் கோயில் யானை உற்சாக குளியல் - வீடியோ
திருச்சி: நீச்சல் குளத்தில் கோயில் யானை உற்சாக குளியல் - வீடியோ
திருச்சி திருவானைக்காவல்கோவிலில் யானைக்கென்று பிரத்யேகமாக நீச்சல் குளம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
இக்கோவிலில் அகிலா என்ற யானை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் யானை குளிப்பதற்காக கோவில் வளாகத்தில், 20 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி ஆழத்தில் சரிவுப்பாதை வசதியுடன் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. இதில் யானை தினமும் உற்சாகமாக குளியல் போட்டு வருகிறது. அகிலா உற்சாக குளியல் போடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.