பயணிகள் அவதி
பயணிகள் அவதிfile

திருவள்ளூர் டூ சென்னை: புறநகர் ரயிலில் கோளாறு - ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி!

திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ற புறநகர் ரயிலில் ஏற்பட்ட பழுது காரணமாக புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.
Published on

செய்தியாளர்: எழில்

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.40 மணியளவில் சென்னையை நோக்கி புறநகர் ரயில் ஒன்று சென்றது. அப்போது நெமிலிச்சேரி, பட்டாபிராம் இடையே ரயில் சென்ற போது ஓட்டுநர் அறை பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து நெமிலிச்சேரிக்கும், பட்டாபிராமுக்கும் இடையே ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த ரயிலில் பயணித்தவர்கள் அவதி அடைந்தனர்.

Rail
Railfile

இதைத் தொடர்ந்து இந்த ரயிலுக்கு பின்னால் வந்த புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் அவதியடைந்தனர். அவர்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. ரயிலில் ஏற்பட்ட பழுது குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே துறையினர் பழுதை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக ரயிலில் ஓட்டுநர் அறையில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அவதி
செல்போன் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்துகிறது ஜியோ – எவ்வளவு தெரியுமா?

இரவில் ரயில்கள் நின்றதால் ஒருமணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அவதியடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com