நீதிமன்ற உத்தரவு எதிரொலி - வல்லூர் அனல்மின் நிலையம் மூடல்

நீதிமன்ற உத்தரவு எதிரொலி - வல்லூர் அனல்மின் நிலையம் மூடல்

நீதிமன்ற உத்தரவு எதிரொலி - வல்லூர் அனல்மின் நிலையம் மூடல்
Published on

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, வல்லூரில் உள்ள அனல்மின் நிலையம் மூடப்பட்டது. 

திருவள்ளூரின் வல்லூரில் தேசிய அனல்மின் கழகம், தமிழக மின் வாரியம் இணைந்து அனல்மின் நிலையம் அமைத்துள்ளது. அனல்மின் நிலையத்தில் 3 பிரிவுகளில் தலா 500 மெகா வாட் திறனில் மொத்தம் 1,500 மின் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தியாகும் மின்சாரத்தில் 70 % தமிழகத்திற்கும், 30% பிற மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. 

நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவதால் அதிகளவில் சாம்பல் வெளியாகி அப்பகுதியில் கொட்டப்படுகிறது. அதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. சாம்பல் குட்டையை விரிவாக்கம் செய்ய மாங்குரோவ் காடுகளை அழிப்பதாக கூறி இந்த வழக்கு போடப்பட்டது. 

இந்நிலையில், சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டக் கூடாது என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அனல்மின் நிலையத்திற்கும் தடை விதித்தது. உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து வல்லூரில் உள்ள அனல்மின் நிலையம் மூடப்பட்டது. அனல்மின் நிலையம் மூடப்பட்டதால் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 3,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com