கருணைக் கொலை செய்யுங்கள்: ஆட்சியரிடம் சகோதரிகள் மனு

கருணைக் கொலை செய்யுங்கள்: ஆட்சியரிடம் சகோதரிகள் மனு

கருணைக் கொலை செய்யுங்கள்: ஆட்சியரிடம் சகோதரிகள் மனு
Published on

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் சகோதரிகள் இருவர் தங்களை கருணைக் கொலை செய்யக் கோரி மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் எல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 12 சென்ட் நிலம் உள்ளது. அவரது வாரிசுகளான ஜெயலட்சுமி, கன்னியம்மாள், சாரதா ஆகியோர் அந்த நிலத்திற்கு உரியவர்கள் என்ற நிலையில், சக்கரவர்த்தி என்பவர் போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்திற்கு உரிமைக் கொண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தாலும், சக்கரவர்த்தி ஆயுதப்படை காவலர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் வீட்டையும், சொத்தையும் மீட்டுக்கொடுக்க வேண்டும் அல்லது தங்களை கருணை கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com