\
திருவள்ளூர்: குளிக்க வைத்திருந்த வெந்நீரில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

திருவள்ளூர்: குளிக்க வைத்திருந்த வெந்நீரில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

திருவள்ளூர்: குளிக்க வைத்திருந்த வெந்நீரில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

ஊத்துக்கோட்டை அருகே குளிப்பாட்ட வைத்திருந்த வெந்நீரில் கால்தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாமரைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரசாக் (28). கடந்த 10 ஆம் தேதி இவருடைய ஒன்றரை வயது குழந்தையை குளிக்க வைக்க பாத்திரத்தில் வெந்நீர் வைத்திருந்த நிலையில், குழந்தை கால்தவறி வெந்நீரில் விழுந்ததில் படுகாயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிந்தது. இது குறித்து ஊத்துக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com