சிறுமிக்கு நேர்ந்த சோகம் : அதிர்ச்சியில் இறந்த பெரியப்பா

சிறுமிக்கு நேர்ந்த சோகம் : அதிர்ச்சியில் இறந்த பெரியப்பா

சிறுமிக்கு நேர்ந்த சோகம் : அதிர்ச்சியில் இறந்த பெரியப்பா
Published on

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை அருகே ஜிகுலூர் கிராமத்தில் கோயில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவிற்கு சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து செல்கின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் மகள் ஸ்சுவேதா (12) என்ற பள்ளி மாணவி கோயிலுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் குடி போதையில் வந்த நபர் எதிர்பாராமல் ஸ்சுவேதாவின் மீது மோதினார். 

இதில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் வந்து விபத்தை
ஏற்படுத்தியவரை அங்கிருந்தவர்கள் பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டார். சிறுமி உயிரிழந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் பெரும் சோகமடைந்து கதறி அழுதனர். சிறுமியின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த அவருடைய பெரியப்பா வீரராகவ் ராவ் (60) என்பவர் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தார்.

அவரை மீட்டு சோளிங்கர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த ஆர்.கே பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com