திருவள்ளூரில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 938 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,980 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையின் அண்டை மாநிலமான திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனை அடுத்து மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 947 ஆக அதிகரித்துள்ளது