காஞ்சிபுரம்: திடீரென தீப்பற்றி எரிந்த ஏசி பஸ் - ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய ஊழியர்கள்!

ஒரகடம் அருகே தனியார் ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற ஏ.சி பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
Fire accident
Fire accidentpt desk

செய்தியாளர்: கோகுல்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓட்டுநர் ராஜி (30). இவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் இயங்கும் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் ஆலையிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏசி பேருந்து ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றுள்ளார்.

Fire accident
Fire accidentpt desk

அப்போது மாத்தூர் பகுதியை கடந்தபோது பேருந்தின் முன் பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. உடனே சூதாரித்துக் கொண்ட ஓட்டுநர், பேருந்தை சாலையோரமாக நிறுத்தி ஊழியர்களை அவசர அவசரமாக கீழே இற்க்கியுள்ளார். இதையடுத்து சில நொடிகளில் பேருந்து தீ பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

Fire accident
திருவள்ளூர்: அரசு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட 54 வீடுகள் இடித்து தரை மட்டம்

இது குறித்து ஒரகடம் போலீஸாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பேருந்து முழுவதுமாக தீயில் எரிந்து சேதமடைந்தது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com