திருவள்ளூர்: அதிகாலை 4 மணி முதல் வரிசையில் நிற்கும் மதுக்குடிப்பவர்கள்..!

திருவள்ளூர்: அதிகாலை 4 மணி முதல் வரிசையில் நிற்கும் மதுக்குடிப்பவர்கள்..!

திருவள்ளூர்: அதிகாலை 4 மணி முதல் வரிசையில் நிற்கும் மதுக்குடிப்பவர்கள்..!
Published on

(கோப்புப் புகைப்படம்)

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 76 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதால் அதிகாலை 4 மணி முதலே மதுக்குடிப்பவர்கள் வரிசையில் நிற்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 126 மதுக்கடைகள் உள்ளன. அவற்றில் கடந்த முறை 40 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், சில கடைகள் மூடப்பட்டன.

இதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 76 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, சோழவரம், திருத்தணி ஆகிய காவல் உட்கோட்டங்களில் 76 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன.

மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசங்கள் அணிந்து வரவும், சமூக இடைவெளியை பின்பற்றி மது வாங்கவும், குடைகளை கொண்டு வரவும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு மதுக்கடைகளிலும் நாளொன்றுக்கு 1000 டோக்கன்கள் மட்டுமே வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுக்கடையின் முன்பு மது வாங்க அதிகாலை 4 மணி முதலே மதுக்குடிப்பவர்கள் மது வாங்க நிற்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com