திருவையாறு: ஆதார் அட்டையில் பிறந்த வருடம் தவறாக குறிப்பிடப்பட்டதால் அவதியுறும் முதியவர்
அவதியுறும் முதியவர் முனியராசுபுதிய தலைமுறை

திருவையாறு: ஆதார் அட்டையில் ஏற்பட்ட பிழையால் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்... கண்ணீரில் முதியவர்!

திருவையாறு அருகே ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என குறிப்பிட்டு இருப்பதால், முதியோருக்கான உதவித்தொகை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Published on

திருவையாறு அருகே ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என குறிப்பிட்டு இருப்பதால், முதியோருக்கான உதவித்தொகை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவையாறு: ஆதார் அட்டையில் பிறந்த வருடம் தவறாக குறிப்பிடப்பட்டதால் அவதியுறும் முதியவர் முனியராசு
விவசாயி முனியராசுபுதிய தலைமுறை

சம்பவத்தின்படி தஞ்சாவூர் மாவட்டம் அம்பதுமேல் நகரம் கிராமத்தில் வசித்துவரும் விவசாயி முனியராசுவின் ஆதார் அட்டையில் வயது தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிறந்த ஆண்டு 1955 என்பதற்கு பதில் 1900 என இருப்பதால் முதியோருக்கான உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருவையாறு: ஆதார் அட்டையில் பிறந்த வருடம் தவறாக குறிப்பிடப்பட்டதால் அவதியுறும் முதியவர்
அண்ணா பல்கலையில் ஆய்வு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி... நிர்வாகத்திற்கு பிறப்பித்த உத்தரவு!

இதனை சரிசெய்ய வட்டாட்சியர் அலுவலகம் சென்றும் பயனில்லை என முனியராசு வேதனையுடன் கூறுகிறார். இது குறித்து திருவையாறு வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டபோது, இதுவரை தன்னுடைய கவனத்திற்கு வரவில்லை என்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com