தமிழ்நாடு
டிராக்டர் மோதி சிறுமி உயிரிழப்பு - டிரைவர் கைது
டிராக்டர் மோதி சிறுமி உயிரிழப்பு - டிரைவர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டர் மோதி 12 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செருபனையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் சக்திபிரியா ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சக்திபிரியா(12) வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக சிறுமி மீது மோதியது. இதில் சக்திபிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலறிந்து வந்த எடையூர் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய தேவதானம் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் ஜான் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.