தமிழ்நாடு
புதிய தலைமுறை செய்தி எதிரொலி: திருத்தணி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
புதிய தலைமுறை செய்தி எதிரொலி: திருத்தணி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் முதியவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்ட செய்தி புதிய தலைமுறையில் வெளியான நிலையில், அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருத்தணி பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்த 70 வயது ஆதரவற்ற முதியவர் ஒருவர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆதரவளிக்க யாரும் வராததால், மருத்துவமனை ஊழியர்கள் முதியவரை வெளியேற்றியது தொடர்பான செய்தி புதிய தலைமுறையில் வெளியானது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இன்று ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, முதியவருக்கு சிகிச்சை அளிக்காதது ஏன் என தலைமை மருத்துவரிடம் விளக்கம் கேட்டார்.