கிணற்றில் தவறி விழுந்த முதியவர்: 3 நாட்களுக்கு பின் மீட்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கிணற்றி தவறி விழுந்த 74 வயது முதியவர், 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜூலு, கடந்த 4 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வராததால், உறவினர்கள் தேடிவந்தனர். இந்த நிலையில், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட முகூர் கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் முதியவர் ரங்கராஜூலு தவறி விழுந்துள்ளார். கிணற்றில் இருந்து முதியவரின் குரலைக் கேட்ட அப்பகுதியினர், திருத்தணி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், 3 தினங்களாக கிணற்றில் தவித்த முதியவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். 3 நாட்கள் உணவின்றி உயிருக்கு போராடிய முதியவருக்கு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.