சிறுமிகளுக்கு பாராட்டு
சிறுமிகளுக்கு பாராட்டுpt desk

திருத்தணி | பக்தர் தவற விட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமிகளுக்கு பாராட்டு!

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர் தவற விட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Published on

செய்தியாளர்:B.R.நரேஷ்

சென்னை ஜவஹர்லால் நகரைச் சேர்ந்தவர் கவுதம் (33). ஐ.டி.ஊழியரான இவர், தனது குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்துள்ளனர். இதையடுத்து சாமி தரிசனம் செய்த இவர்கள் மீண்டும் ஊருக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது கவுதம் கையில் அணிந்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இரண்டரை சவரன் தங்க காப்பு காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக மலைக் கோயில் புறக்காவல் நிலையத்தில் கவுதம் புகார் செய்தார். சற்று நேரத்தில் இரு சிறுமிகள் புறக்காவல் நிலையம் வந்து கார் பார்க்கிங் பகுதியில் காப்பு கிடந்ததாகக் கூறி பணியில் இருந்த போலீசாரிடம் வழங்கியுள்ளனர். ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்த பவித்ரா(12), ரேணுகா (7) என்ற சகோதரிகள் சாமி தரிசனம் செய்ய வந்த போது நகைகள் கிடந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

சிறுமிகளுக்கு பாராட்டு
ராசிபுரம் | கோயில் திருவிழாவில் வினோதம் - பூசாரியிடம் சாட்டையடி வாங்கிய பக்தர்கள்!

சிறுமிகள் தங்களது வறுமையிலும் பக்தர் தவறவிட்ட நகையை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உயர்ந்த பன்போபை நகை தவறவிட்ட பக்தர் குடும்பத்தினர் மற்றும் போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com