\
திருமணத்திற்கு பணமின்றி தற்கொலை செய்த இளைஞர்

திருமணத்திற்கு பணமின்றி தற்கொலை செய்த இளைஞர்

திருமணத்திற்கு பணமின்றி தற்கொலை செய்த இளைஞர்
Published on

திருப்பூரில் திருமணத்திற்கு பணம் இல்லாததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபேஷ் குமார் (31). இவருக்கு நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறமால் தடைபட்டு வந்துள்ளது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் உறவுக்கார பெண் ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டு, திருமணம் நடைபெற இருந்துள்ளது. திருமணத்திற்கு செலவுகள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில், போதிய பணம் இல்லாமல் ரூபேஷ் தவித்து வந்துள்ளார். திருமணம் நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், திருமண செலவுகளுக்கு பணம் இல்லாத காரணத்தால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com