\
துப்பாக்கிச் சூடு விவகாரம்: திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது

துப்பாக்கிச் சூடு விவகாரம்: திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது

துப்பாக்கிச் சூடு விவகாரம்: திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது
Published on

திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீது 5 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதர் குமார் ஆகியோர் கோயில் நிலத்தில் சாலை அமைக்க 50 பேருடன் வந்தனர். இதனை திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மணின் தந்தை லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய போது, இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்தது. இதில் லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு குண்டு காரிலும், இன்னொரு குண்டு ஸ்ரீநிவாசன் என்பவரின் முதுகு பகுதியில்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக எம்.எல் ஏ இதயவர்மன் மீது 5 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com