திருநள்ளாறில் மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருநள்ளாறில் மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருநள்ளாறில் மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
Published on

காரைக்கால் அருகே‌ திருநள்ளாற்றில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவானுக்கு உகந்த ஸ்தலமா‌ன தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று குடமுழுக்கு பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. 

சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத காலை 9.15 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்காக 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. 

சோழர் கால கோவிலான இதன் பழமை மாறாமல் கருங்கற்களால் வடிவமைத்து புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு விலிருந்து கொண்டு வரப்பட்ட 3 டன் பூக்களால் கோயிலிலுள்ள சன்னதிகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com