கைதிக்கு கொரோனா : மூடப்பட்ட காவல்நிலையம்

கைதிக்கு கொரோனா : மூடப்பட்ட காவல்நிலையம்

கைதிக்கு கொரோனா : மூடப்பட்ட காவல்நிலையம்
Published on

கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து திருநள்ளாறு காவல் நிலையம் மூடப்பட்டது.

திருநள்ளாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுரக்குடியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர், தகராறு வழக்கு ஒன்றில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை சிறைக்கு கொண்டு செல்லும் முன் கைதிக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் வசித்த சுரக்குடி கிராமம் சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த நபர் விசாரணைக்காக திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்ததால் காவல் நிலையம் மூடப்பட்டு திருநள்ளாறு கோயில் அருகில் உள்ள புறகாவல் நிலையத்தில் இயங்குகிறது.

கைதியை அழைத்து வந்த காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் பணியாற்றிய காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com