\
திருமுருகன் காந்தியை வாழ்த்தினார் பாரதிராஜா

திருமுருகன் காந்தியை வாழ்த்தினார் பாரதிராஜா

திருமுருகன் காந்தியை வாழ்த்தினார் பாரதிராஜா
Published on

திருமுருகன் காந்தியை சந்தித்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

மெரினாவில் தடையை மீறி இலங்கை தமிழர்கள் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை கூட்டியதாகவும் பொதுச் சொத்துக்களை சேதம் செய்ததாகவும் குற்றம் சுமத்தி குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் மே 17 இயக்கத்தை சார்ந்த திருமுருகன் காந்தி. அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் தொடர்ச்சியாக அவர் விடுதலை செய்யப்பட்டார். அதையொட்டி தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார் பாரதிராஜா. இந்த சந்திப்பு இயக்குநர் அலுவலகத்தில் இன்று நடந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com