ஆளுநர் ரவியின் மாய அரசியலுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள் - திருமாவளவன்
செய்தியாளர்: அச்சுதராஜகோபால்
பெரம்பலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்....
திருக்குறளை சனாதனத்தோடு ஒப்பிடுவதா?
உலக மக்கள் அனைவரும் ஒரே குலம் என்றுரைத்த திருக்குறள், சனாதனத்திற்கும் புதிய கல்விக் கொள்கைக்கும் நேரெதிரானது. ஆளுநர் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் என்பதால் இதனை சனாதனத்தோடும் புதிய கல்விக் கொள்கையுடனும் ஒப்பிடுகிறார். தமிழ்., திருவள்ளுவர், பாரதி என அனைத்தையும் சனாதனத்தோடு இணைத்துப் பேசுவது தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முன்னெடுத்து வருகிறார். இந்த மாய அரசியலெல்லாம் தமிழக மக்களை மயங்கச் செய்யாது
திருவள்ளுவரின் பக்தர் மோடி என கூறுவது தேர்தல் அரசியல்:
ஒடிசாவில் தமிழரை வெற்றியடையச் செய்யலாமா என விமர்சித்த அமித்ஷா, இன்று திருவள்ளுவரின் பக்தர் மோடி என கூறுவது தேர்தல் அரசியலுக்கான கருத்து. பாஜக கூட்டணியில் அதிமுக கூட்டணி ஆட்சி என்ற கருத்தை எடப்பாடி தெரிவிக்காத நிலையில், அந்த கூட்டணி தொடருமா என்பது சந்தேகம். அந்த கூட்டணியில் இணைவதற்கான அச்சுறுத்தும் வார்த்தைகளை பாஜக தெரிவித்து வருகிறது.
ஊழல் செய்வதற்கான ஆதாரம் இருந்தால் அம்பலப்படுத்தலாம்:
பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பு தமிழகத்தில் காலூன்றாமல் இருப்பதே முக்கியம். தொடர்ந்து ஜனநாயக சக்திகளை சிதறவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு தனிப்பட்ட லாபம் தரும் எண்ணம் இல்லை. தமிழகத்தில் ஊழல் நடப்பதற்கான ஆதாரம் இருந்தால் அதிகாரம் கொண்டுள்ள அவர்கள் அம்பலப்படுத்தலாம். ஆனால், அரசியல் மிரட்டலுக்கான குற்றச்சாட்டு என திருமாவளவன் தெரிவித்தார்.