\
திருமாவளவன்
திருமாவளவன்pt

விசிக மாநாட்டில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. தொண்டர்கள் கூட்டத்தில் சிக்கித்தவிப்பு!

நேற்று நடைபெற்ற உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு தள்ளியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
Published on
Summary

கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில், தலைவர் திருமாவளவன் தொண்டர்கள் கூட்டத்தில் சிக்கி சில நிமிடங்கள் மூச்சுத்திணறல் அனுபவித்தார். ரேம்ப் வாக் மேடையில் அதிகமான தொண்டர்கள் ஏறியதால் நிர்வாகம் சிரமமடைந்து, அவர் குறைந்த நேரமே பேசினார். மாநாடு முடிந்ததும் அவரைச் சந்திக்க தொண்டர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு, இருக்கைகள் உடைப்பு, பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில், தொண்டர்கள் கூட்டத்தில் சிக்கியதால் அக்கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு சிறிது நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னர் நிர்வாகிகள் அவரை அங்கிருந்து பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அதிகளவில் தொண்டர்கள் ரேம்ப் வாக் மேடையில் ஏறியதால், மாநாட்டை நடத்துவதில் நிர்வாகிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் திருமாவளவன் குறைந்த நேரமே பேசினார். மாநாடு முடிந்ததும் அவரைச் சந்திக்க தொண்டர்கள் முண்டியடித்ததால் மேடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இருக்கைகள் உடைந்தன. பின்னர் மேடையில் இருந்த சிலர் துணிகளைக் கிழித்து, இரும்புத் தகரத் தகடுகளை உடைத்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமாவளவன்
ஆவேசமான ஆதவ் அர்ஜூனா.. Sorry கேட்ட முதல்வர் விஜய்.. பேரவையில் நடந்தது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com