\
விரைவில் பல அகோரிகள் தமிழகத்திற்கு வருவார்கள்: திருமாவளவன்

விரைவில் பல அகோரிகள் தமிழகத்திற்கு வருவார்கள்: திருமாவளவன்

விரைவில் பல அகோரிகள் தமிழகத்திற்கு வருவார்கள்: திருமாவளவன்
Published on

விரைவில் பல அகோரிகள் தமிழகத்திற்கு வருவார்கள் என சிதம்பரம் எம்.பி திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசுகைகையில், “மெரினா புரட்சி வரலாற்று புரட்சி. அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதன் பின்னணியில் ஏதோ ஒரு அரசியல் ஓடுகிறது. காஞ்சிபுரத்தில் திருட்டு, கொலை, கொள்ளை ஏராளமாக நடப்பதாகவும் ஆனால் காவல்துறை கண்டுகொள்ள மறுப்பதாகவும் ஏராளமான மக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். 

கங்கை நதியில் இருக்கும் அகோரிகள் கூட தமிழகத்திற்கு வருவார்கள். நிர்வாண சாமியார் வருவார்கள். நீங்கள் வீதியில் நின்று வேடிக்கை பார்க்கவோ அல்லது வணங்கவோ வாய்ப்பு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் இடம் தர காத்திருக்கிறார்கள். எந்த புரட்சியும் அமைப்பு சார்ந்து நிகழும்போதுதான் வெற்றி பெறுகிறது. அரசியல் தலைமை இல்லாமல் எந்த புரட்சியும் இதுவரை உலக சரித்திரத்தில் வெற்றி பெற்றது கிடையாது. அறிவு சார்ந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” எனப் பேசினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com