"செல்லூர் ராஜூவின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! மற்றபடி..."- திருமாவளவன் பதில்!

"செல்லூர் ராஜூவின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! மற்றபடி..."- திருமாவளவன் பதில்!
"செல்லூர் ராஜூவின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! மற்றபடி..."- திருமாவளவன் பதில்!

“அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அன்பின் அடிப்படையில் கூட்டணிக்கு வர வேண்டும் என பேசி இருப்பார். ஆனால் நாங்கள் திமுக கூட்டணியில் வலிமையாக இருக்கிறோம்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பாக ‘ எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற புகைப்பட கண்காட்சி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதை அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பார்வையிட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள் நேரில் அதை பார்வையிட்டு, கண்காட்சி புத்தகத்தில் அதை பாராட்டி எழுதினார். 

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அயராத உழைப்பால் முதல்வர் முன்னேறி இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்பட கண்காட்சி அமைந்து இருக்கிறது” என்றார். பின் அதிமுக கூட்டணிக்கு விசிக-வை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அழைத்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், “அன்பின் அடிப்படையில் செல்லூர் ராஜூ பேசி இருக்கிறார். அவருடைய அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி. மற்றபடி தொடர்ந்து திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் விசிக இருந்து வருகிறது. திமுக கூட்டணியை அகில இந்திய அளவில்  கொண்டு செல்ல இருப்பதே எங்களின் அடுத்த கட்ட பணி” என்று குறிப்பிட்டார்.

மேலும் “ஆன்லைன் ரம்மி தடைக்கு அனுமதி அளிக்காத ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” என்றும், “சட்டத்தின் காரணத்தை கூறும் ஆளுநர், மனிதாபிமான அடிப்படையில் கூட முடிவு எடுப்பதற்கு ஏன் யோசிக்கிறார்?” என கேள்வி எழுப்பினார் திருமாவளவன்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com