முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: திருமாவளவன் கோரிக்கை

முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: திருமாவளவன் கோரிக்கை

முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: திருமாவளவன் கோரிக்கை
Published on

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார். மேலும், மாணவர்களின் உள்ளத்தில் வெறுப்பு அரசியலை வளர்க்கும் சக்திகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருமாவளவன், உயிரிழந்த மாணவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவரத் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கல்வியை காவிமயமயமாக்க பாஜக முயற்சி செய்துவருவதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com