\
விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கைது

விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கைது

விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கைது
Published on

விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில், 21-வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே தி.மு.க, அ.தி.மு.க பன்னீர்செல்வம் அணி, காங்கிரஸ், த.மா.கா, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ‌கட்சியினர் சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com