“சமூகநீதியை சீர்குலைக்க சதி” - 10% இடஒதுக்கீடு குறித்து திருமா

“சமூகநீதியை சீர்குலைக்க சதி” - 10% இடஒதுக்கீடு குறித்து திருமா

“சமூகநீதியை சீர்குலைக்க சதி” - 10% இடஒதுக்கீடு குறித்து திருமா
Published on

ஜெயலலிதா இருந்திருந்தால் 10 சதவீத இடஒதுக்கீட்டை கண்டிப்பாக எதிர்த்திருப்பார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு மருத்துவப் படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 21 கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சமூகநீதிக்கு ஆபத்து என்பதால் 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கிறோம் எனத் தெரிவித்த திருமாவளவன், சமூகநீதியை சீர்குலைக்க கொண்டு வரப்பட்ட சதித்திட்டமாக 10 சதவீத இடஒதுக்கீட்டை கருதுகிறோம் எனக் கூறினார். ஜெயலலிதா இருந்திருந்தால் 10 சதவீத இடஒதுக்கீட்டை கண்டிப்பாக எதிர்த்திருப்பார் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com