Thirumavalavan
Thirumavalavanpt desk

“திமுக, விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை” – யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த திருமாவளவன்

“திமுக - விசிக இரு கட்சிகளுக்கும் இடையில் எந்த சலசலப்பும் இல்லை. இனி உருவாவதற்கும் வாய்ப்பில்லை” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: பிரவீண்

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்....

விசிக திருமாவளவன்
விசிக திருமாவளவன்முகநூல்

என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான சிறிய வீடியோ ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை பலரும் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டார்கள். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்திருக்கிறது. அதனால் திமுக விசிக இடையில் எந்த சிக்கலும் இல்லை எந்த சிக்கலும் எழாது” என்றார்.

Thirumavalavan
பழனி பஞ்சாமிர்தம் விவகாரம்|இயக்குநர் மோகன்ஜி மீது புகார் கொடுத்தது யார்? ஜாமீன் கிடைத்தது எப்படி?

துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கட்சியில் உள்ள முன்னணி தோழர்களோடு கலந்து பேசி தான் எந்த நடவடிக்கையும் இருக்கும். கட்சி விவகாரங்களை முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர், உயர்நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களுடன் தொலைபேசி மூலமாக பேசியிருக்கிறேன். மீண்டும் கலந்து பேசி நடவடிக்கை இருக்கும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com