\
Thiruma Returns to Assembly Polls After 10 Years
திருமாவளவன்web

மத தேசியவாதத்திற்கு மாற்று.. விசிக சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு - திருமாவளவன் விளக்கம்!!

தமிழ்த்தேசியம் என்பது தமிழ் மொழி மற்றும் தமிழ் இன உணர்வை மட்டும் மையப்படுத்தியது அல்ல என்றும் மொழி உரிமை, இன உரிமை மற்றும் பன்மைத்துவத்தை வலியுறுத்தும் தேசியவாதக் கருத்தியல் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே அறிவித்திருந்தார். தொடர்ந்து இந்த மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தசூழலில் தான், மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, விரைவில் தனது தலைமையில் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவித்து, மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அதில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

திருமாவளவன்
திருமாவளவன்Pt web

அப்போது தமிழ்தேசியம் குறித்து விளக்கமளித்துப் பேசிய அவர், தமிழ் தேசியம் என்பது தமிழ் மொழி மற்றும் தமிழ் இன உணர்வை மட்டும் மையப்படுத்தியது அல்ல என்றும், மொழி உரிமை, இன உரிமை மற்றும் பன்மைத்துவத்தை வலியுறுத்தும் தேசியவாதக் கருத்தியல் என்றும் விளக்கினார்.

மேலும், இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு மொழி சமூகத்திற்கும் தனித்த தேசிய இன அடையாளம் உருவானது தவிர்க்க முடியாத ஒன்று எனவும் இந்திய அரசியலமைப்பு பன்மைத்துவ அடையாளங்களுடன் அனைவரும் இந்தியர்களாக இணைந்து வாழும் தேசியவாதத்தை முன்வைத்ததாகவும், அதையே காங்கிரஸ் மற்றும் மகாத்மா காந்தி வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

Thiruma Returns to Assembly Polls After 10 Years
அனைத்துக் கட்சி கூட்டம் முடியுமா? முடியாதா?.. மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் கேள்வி!!

தற்போது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மத அடிப்படையிலான தேசியவாதத்தையும், இந்துராஷ்டிரம் என்ற கருத்தையும் முன்வைப்பதாக விமர்சித்த அவர், அதற்கு மாற்றாக மொழிவழி தேசிய இனங்களின் உரிமைகளை மதிக்கும் பன்மைத்துவ தேசியவாதமே தமிழ்த்தேசியம் என்றார்.

மேலும், தமிழ்த்தேசியம் எந்த மொழியையும், மதத்தையும் அல்லது பிற தேசிய இனங்களையும் வெறுப்பதோ இழிவுபடுத்துவதோ அல்ல என்றும், தமிழர் அடையாளத்தை பாதுகாத்தபடியே இந்தியாவின் பன்மைத்துவ கூட்டாட்சியை வலுப்படுத்தும் அரசியல் பார்வையே தமிழ்த்தேசியம் எனத் தெரிவித்துள்ளார்.

Thiruma Returns to Assembly Polls After 10 Years
சுதந்திர தின விழாவில் கொடியேற்றும் முதல்வர் விஜய்.. தகைசால் தமிழர் விருது யாருக்கு?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com