\
கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம் - சுவாதி மீது வழக்குப்பதிய மனு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம் - சுவாதி மீது வழக்குப்பதிய மனு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம் - சுவாதி மீது வழக்குப்பதிய மனு
Published on

திருச்செங்கோடு கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி மீது வழக்குப்பதிவு செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு பள்ளிபாளையம் ரயில்வே தண்டவாளம் அருகே உயிரிழந்து கிடந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், யுவராஜ் என்பவர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் முதல் சிபிசிஐடி சார்பில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் கோகுல்ராஜ் உடன் படித்து வந்த சுவாதி, கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சாட்சியம் அளித்தார். அப்போது, கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் தனக்கு யாரென்று தெரியாது என அவர் பிறழ்சாட்சியம் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பிறழ்சாட்சியம் அளித்ததாக சுவாதி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கக்கோரி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com