“உங்க பிராடுத்தனம் ரெக்கார்டு ஆகுது” - வெளியானது திருச்செந்தூர் கோயில் இணை ஆணையரின் ஆடியோ!

“உங்க பிராடுத்தனம் ரெக்கார்டு ஆகுது” - வெளியானது திருச்செந்தூர் கோயில் இணை ஆணையரின் ஆடியோ!
“உங்க பிராடுத்தனம் ரெக்கார்டு ஆகுது” - வெளியானது திருச்செந்தூர் கோயில் இணை ஆணையரின் ஆடியோ!

திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்றுவரும் நிர்வாக சீர்கேடுகளுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளையும் ஊழியர்களையும் கண்டித்து கோவில் இணை ஆணையர் பேசியுள்ள ஆடியோ இணையங்களில் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக புகழ்பெற்றது திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஆனால் கோவிலில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் நடைபெற்று வருகின்றன. முழுநேர அன்னதான திட்டத்திற்கு பக்தர்களை கட்டாயப்படுத்தி 50 ரூபாய் நன்கொடை வசூலிப்பது, நீதிமன்ற உத்தரவையும் மீறி விஐபி தரிசனம் செல்லும் வழியில் பக்தர்கள் செல்ல பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதிப்பது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன.

இதனை கண்டித்தும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுவரும் கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கண்டித்து கோவில் இணை ஆணையர் குமர துறை வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குமர துறை சேலம் கோட்ட இனையாளராக இடமாற்றப்பட்டுள்ளர். அதனைத் தொடர்ந்து திருச்சிக்கு ஸ்ரீரங்கம் கோவில் இணையாளர் மாரிமுத்து திருச்செந்தூர் கோவில் இணையாளராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com