\
மூன்றாவது சோமவாரம்: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற 1008 சங்காபிஷேகம்

மூன்றாவது சோமவாரம்: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற 1008 சங்காபிஷேகம்

மூன்றாவது சோமவாரம்: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற 1008 சங்காபிஷேகம்
Published on

மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

கார்த்திகை மாத மூன்றாவது சோமவாரத்தையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுவாமி சன்னதி அருகே 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. அதில் லிங்க வடிவில் சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தி உற்சவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து சங்காபிஷேகம் நிறைவடைந்த நிலையில், வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். மேலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com