வெம்பக்கோட்டை அகழாய்வு
வெம்பக்கோட்டை அகழாய்வுபுதிய தலைமுறை

வெம்பக்கோட்டை: 3-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் குடுவை, சங்கு வளையல்கள்!

விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் சிறிய அளவிலான சுடுமண் குடுவை, மனித உருவத்தின் கால் பகுதி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுப்பு.
Published on

செய்தியாளர் : A. மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வில் நடைபெற்று வருகிறது. இங்கு இதுவரை தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,250-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளன.

வெம்பக்கோட்டை அகழாய்வு
வரலாற்றில் வரப்போகும் மாற்றம்... முதலமைச்சர் அறிவித்த முக்கிய அறிவிப்பு இதோ!

இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது சிறிய அளவிலான சுடுமண் குடுவை, மனித உருவத்தின் கால் பகுதி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெம்பக்கோட்டை அகழாய்வு
வெம்பக்கோட்டை அகழாய்வுபுதிய தலைமுறை

இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், “நம் முன்னோர்கள் இப்பகுதியில் வசித்து தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் இந்த அகழாய்வில் கிடைத்து வருகின்றது. குறிப்பாக அதிகமான சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாடுவதற்காக சிறிய அளவிலான விளையாட்டுப் பொருட்களையும் முன்னோர்கள் உருவாக்கி உள்ளது ஆய்வின் மூலம் தெரிய வருகிறது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com