\
ஆம்லெட் சாப்பிட்டுவிட்டு ஆட்டையை போட்ட திருடன்

ஆம்லெட் சாப்பிட்டுவிட்டு ஆட்டையை போட்ட திருடன்

ஆம்லெட் சாப்பிட்டுவிட்டு ஆட்டையை போட்ட திருடன்
Published on

கடலூரில் வீட்டுக்குள் திருட வந்த திருடன், அங்கிருந்த சமையலறையில் ஆம்லெட் போட்டு சாப்பிட்டுவிட்டு, சாவகாசமாக பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

கடலூர் அருகே கே.என்.பேட்டையில் தனியாக வசித்து வரும் சந்திரா, நேற்று இரவு தனது வீட்டைப் பூட்டிவிட்டு அருகேயுள்ள மகள் வீட்டுக்குச் சென்றார். காலையில் திரும்பியபோது, வீட்டிலிருந்த இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள், 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பாதிரிபுலியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டிற்கு திருட வந்தவன், அங்குள்ள சமையலறையில் இருந்த முட்டைகளைக் கொண்டு ஆம்லெட் போட்டு சாப்பிட்டபடி, ஓய்வெடுத்துவிட்டுச் சென்றதும் தெரியவந்தது. திருட வந்த இடத்தில் சமையல் செய்து சாப்பிட்ட திருடன் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com