\
அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Published on: 

தமிழகத்தில் ஆங்காங்கே அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திள்ளது. 18 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை இயக்குநர் லதா அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாளை பகல் 12 மணி முதல் மாலை 3 மணி முதல் யாரும் வெளியில் வர வேண்டாம் எனவும், பள்ளிகளில் திறந்த வெளியில் வகுப்புகள் நடத்த வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com