தமிழ்நாடு
சென்னை: தடையை மீறி கடற்கரையில் குவியும் மக்கள்; கொரோனா பரவும் அபாயம்
சென்னை: தடையை மீறி கடற்கரையில் குவியும் மக்கள்; கொரோனா பரவும் அபாயம்
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சென்னை கடற்கரைகளில் மக்கள் கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
கடற்கரைகளுக்கு செல்ல தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அதனையும் மீறி பலரும் கடற்கரைகளுக்கு சென்றனர். மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால், அதன் அருகில் இருக்கும் பட்டினம்பாக்கம் உள்ளிட்ட சிறிய கடற்கரைகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். பலரும் முகக்கவசத்தை அணியாமலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் கடற்கரைகளில் குவிந்தனர்.