நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் மது பாட்டில்கள் வீச்சு - திமுகவினர் இருவர் கைது

நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் மது பாட்டில்கள் வீச்சு - திமுகவினர் இருவர் கைது
நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் மது பாட்டில்கள் வீச்சு - திமுகவினர் இருவர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் திமுகவினர் மது பாட்டில்களை வீசியதாக புகார் எழுந்துள்ளது.  

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சித்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் அலாவுதீன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பி. காளியம்மாள் பேசினார்.

காளியம்மாள் திமுகவை விமர்சனம் செய்து பேசியதாக கூறப்படும் நிலையில், அந்தப் பகுதியில் திமுக கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த திமுகவினர், பொதுக்கூட்ட மேடைக்கு முன்பு வந்து மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது மேடை அருகே இருந்த நாம் தமிழர் கட்சியினர் காளியம்மாளை சுற்றி நின்று பாதுகாத்ததோடு திமுகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். உடனடியாக போலீசார் திமுகவினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததோடு, அவர்களது அலுவலகத்திலேயே அமர வைத்து அவர்களை வெளியில் வராதபடி அடைத்து நின்றதாக தெரிகிறது.

தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், பாட்டில் வீசிய  இரண்டு திமுகவினரை கைது செய்ததாக போலீசார் நாம் தமிழர் கட்சியினரிடம் தெரிவித்தனர். 

அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மாநில முழுவதும் இரு கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் திமுகவினர் மது பாட்டில்களை வீசியதால் ஏற்பட்டுள்ள மோதல் பெரும் கசப்புணர்வை இரு கட்சியினர் இடையே ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com