\
மது போதையில் பள்ளி வாகனத்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு

மது போதையில் பள்ளி வாகனத்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு

மது போதையில் பள்ளி வாகனத்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு
Published on

பரமக்குடி அருகே மதுபோதையில் தனியார் பள்ளி வாகனத்தை வழி மறித்து ரகளையில் ஈடுபட்டவர்களால் மாணவர்கள் அச்சமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நென்மேனியில் படிக்கும் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பரமக்குடி நகர் பகுதியில் இருந்து பல்வேறு தனியார் பள்ளி வாகனங்கள் சென்று வருகிறது

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பரமக்குடியில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றவதற்காகச் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை நென்மேனி கிராமத்தில் வழிமறித்து போதையில் இருந்த நபர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து கற்களைக் கொண்டு கண்ணாடியை உடைக்க முற்பட்டதால் பள்ளி வாகனத்திற்கு உள்ளே இருந்த மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்தில் சத்தமிட்டனர்.

இதையடுத்து கிராமத்தில் இருந்தவர்கள், போதையில் தகராறு செய்தவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து தனியார் பள்ளி வாகனம் பாதுகாப்பாக சென்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் கேட்டபோது இது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com