"அண்ணாமலையை வருங்கால முதல்வர் என்று அழைப்பதில் தவறில்லை" - நயினார் நாகேந்திரன்

“நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் இந்த திட்டம் ரத்து செய்யப்படலாம்” என பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
annamalai
annamalai pt desk

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது திருவுருவுச் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் முக்கியமான பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவர் பேசியபோது...

tasmac
tasmacpt desk

“மதுக் கடைகளை மூடுவதால் அரசுக்கு வருமானம் குறைகிறது என்பது முக்கியமல்ல. மதுக்கடைகளின் எண்ணிக்கை இன்னும் குறைக்கப்பட வேண்டும். மதுக்கடைகளின் நேரத்தையும் குறைக்க வேண்டும். கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்பதுதான்.

ஆனால், தற்போது பல்வேறு விஷ சாராய உயிரிழப்புகளுக்கு பின்னால் 500 டாஸ்மாக் கடைகளை குறைத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக எடுக்க வேண்டும் என்பதையே பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது.

ஆளுநர் அவருக்கான வேலையை செய்து கொண்டிருக்கிறார். முதலமைச்சர் அவருக்கான வேலையை செய்து கொண்டிருக்கிறார். ஆளுநர் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பது சரியல்ல. விருப்பமில்லை ஒத்து வரவில்லை என்று சொன்னால் எப்படி கடிதம் எழுதுவது என்ற முறை இருக்கிறது. ஆளுநரின் செயல்பாட்டில் எந்த விதமான குந்தகம் விளைவிக்கும் வார்த்தைகளும் இல்லை.

Stalin-Ravi
Stalin-RaviTwitter

கண்டிப்பாக பொது சிவில் சட்டம் எல்லோருக்கும் வேண்டும். பொது சிவில் சட்டம் நாட்டிற்கு கண்டிப்பாக தேவை. தற்போதைய சட்டம் தவறானது; யார் எழுதியிருந்தாலும் தவறானது. பொதுமக்கள் பிரச்னை சம்பந்தமாக எப்போது வேண்டுமானாலும் முதலமைச்சரை சந்திக்கலாம் அவர் நேரம் கொடுத்தால் சந்திப்போம்.

ஆட்சியை கலைப்போம் என்று யாரும் சொல்லவில்லை, ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை என்ற வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்தி இருக்க வேண்டிய தேவை இல்லை.

செந்தில் பாலாஜி பிரச்னை நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

காவல் துறையினருக்கு, அதிகாரிகளுக்கும் அதிக மன அழுத்தம் இருக்கிறது” என்று கூறினார்.

டிஐஜி தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அது சரியான நடைமுறை இல்லை. காவல்துறைக்கு முழு அதிகாரம் கொடுத்து சுதந்திரமாக செயல்பட தமிழக முதல்வர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிகோப்புப் படம்

மகளிர் உரிமைத ;தொகை ஆட்சிக்கு வந்த நாள் முதல் கொடுப்போம் என்று சொன்னார்கள். ஆனால், கொடுக்கவில்லை. அண்ணா பிறந்த நாளிலிருந்து கொடுப்போம் என்று சொல்லி நான்கு மாதம் ஆகிவிட்டது. பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அறிவித்திருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படலாம்.

அண்ணாமலை ரசிகர்கள், வேகத்தில் அவரை வருங்கால முதலமைச்சர் என்று அழைக்கிறார்கள். அதில் தவறில்லை என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com