சுனாமி எச்சரிக்கை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் - குமரி மாவட்ட ஆட்சியர்

சுனாமி எச்சரிக்கை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் - குமரி மாவட்ட ஆட்சியர்
சுனாமி எச்சரிக்கை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் - குமரி மாவட்ட ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை இல்லை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் 70 முதல்
80 கிலோமீட்டர் வரை இருப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்‌டை விட்டு வெளியே வரவேண்டாம் என ஆட்சியர்
அறிவுறுத்தியுள்ளார். கடற்கரை கிராமப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அப்பகுதி மக்கள்
வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. காலை முதல் பலத்த
காற்று வீசி வருவதால் 500க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துவிட்டதாகவும், மரங்களை அப்புறப்படுத்தும் பணி விரைவாக
நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், நேற்றிரவு முதலே மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டுள்ள
புயலாக மாறியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென்தமிழகத்தின்
அநேக இடங்களில் அடுத்த 36 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு
வெளியிட்‌டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு தெற்கே - தென்கிழக்கில் 70 கிலோ மீட்டர்
தூரத்தில் இருப்பதாகவும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் தென்தமிழகம் மற்றும் தெற்கு கேரளா மீனவர்கள்
கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com