\
அண்ணா சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து மாற்றம்

அண்ணா சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து மாற்றம்

அண்ணா சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து மாற்றம்
Published on

சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் பேருந்து நிறுத்தம் அருகே அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிமுள்ள பகுதிகளில் தேனாம்பேட்டையும் ஒன்று. அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் பேருந்து நிறுத்தம் அருகே இன்று இரவு 7 மணியளவில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை.

ஜெமினி பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் தி.நகர் விஜயராகவா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள் ஒருவழி பாதையாக மாற்றிவிடப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் சர்ச் பார்க் பள்ளிக்கு இடையே சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com