மாணவிகள் கொலுசு அணிவதால், மாணவர்களின் கவனம் சிதறும் - அமைச்சர் செங்கோட்டையன்
மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் சிதற வாய்ப்பு இருக்கக் கூடும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 723 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம், மாணவிகள் கொலுசு அணிவதற்கு தடையா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு, மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் சிதற வாய்ப்பு இருக்கக் கூடும் என அவர் பதிலளித்துள்ளார்.
இருந்த போதிலும், கொலுசு அணிந்து வருவதற்கு பள்ளிக்கல்விதுறை தடை விதித்துள்ள விவகாரம் தன்னுடைய கவனத்திற்கு வரவில்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.