சென்னை: வாக்குச்சாவடி வளாகத்தில் வீசப்பட்ட கையுறைகள்; கண்டுகொள்ளாத தேர்தல் பணி ஊழியர்கள்!

சென்னை: வாக்குச்சாவடி வளாகத்தில் வீசப்பட்ட கையுறைகள்; கண்டுகொள்ளாத தேர்தல் பணி ஊழியர்கள்!

சென்னை: வாக்குச்சாவடி வளாகத்தில் வீசப்பட்ட கையுறைகள்; கண்டுகொள்ளாத தேர்தல் பணி ஊழியர்கள்!
Published on

சென்னையில் வாக்குச்சாவடி மைய வளாகத்தில் வாக்காளர்கள் பயன்படுத்திய கையுறைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் ஆங்காங்கே வீசி சென்ற அலட்சியம் நடந்துள்ளது. 

கொரோனா அதிகளவில் பரவிவரும் சூழ்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு வலது கையில் அணிந்து கொள்ள பாலித்தீன் கையுறைகள், வாக்குச்சாவடியில் பணியில் உள்ள அலுவலர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய தனியே சானிடைசர்கள், முகக்கவசங்கள் மற்றும் சர்ஜிகல் முகக்கவசம், ரப்பர் கையுறை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

அதன்படி வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு பிளாஸ்டிக் கையுறைகளை வாக்குச்சாவடிகளில் இருந்த தேர்தல் ஊழியர்கள் வழங்கினர். வாக்களித்து விட்டு வரும் வாக்காளர்கள் அந்த கையுறையை அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியில் போடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வாக்காளர்களின் கையுறைகள் குப்பைத்தொட்டிகளில் போடாமல் வாக்குச்சாவடி மையங்களிலேயே ஆங்காங்கே வீசப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வடசென்னையின் பல வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் பயன்படுத்தப்பட்ட கையுறைகள் குப்பைத்தொட்டியில் போடவில்லை. வாக்குச்சாவடி மைய வளாகத்திலேயே காற்றில் பறந்து கொண்டிருந்தது. ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை இசிஐ மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளிக்குள் 10 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. அங்கு வாக்காளர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கையுறைகள் வாக்குச்சாவடி மைய வளாகத்திலேயே கிடந்தது.

10 குப்பைத்தொட்டிகள் அங்கு வைத்திருந்தும் கூட சிலர் கையுறைகளை ஒழுங்காக குப்பைத்தொட்டியில் வீசவில்லை. இதனை அங்கிருந்த தேர்தல் பணி ஊழியர்களும் கண்டு கொள்ளவில்லை என்பது அலட்சியத்தின் உச்சம். ஊடகத்தினர் அங்கு வந்து அதனை பதிவு செய்த போது தான் தேர்தல் பணி ஊழியரை உடனே வரவழைத்து சுத்தம் செய்ய வைத்தனர்.

- சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com