தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் நினைத்தால் யாரையும் ஆட்சியில் அமர்த்தலாம் : கமல்ஹாசன்
தங்கள் ஆட்சியில் பெண்களுக்கு சம பங்கு கொடுக்கப்படும் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
மக்கள் நீதி மைய கட்சியின் சார்பாக தேனி மாவட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் சுற்றுப்பயண பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆண்டிப்பட்டி பகுதியில் அவர் பேசுவதாக கூறப்பட்டிருந்த நிலையில் பேசாமல் சென்றார், பின்னர் தேனி பங்களாமேடு பகுதியில் கூட்டத்தினரை பார்த்து கையசைத்து சென்ற நிலையில் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்
அப்போது கமல் பேசும்போது: எங்கள் இக்கூட்டத்திற்கு பெண்கள் கைக்குழந்தையோடு வருகை தருகிறார்கள். இன்று பெண்கள் சமத்துவதுடன் மற்றும் மரியாதையோடு இருப்பது எங்கள் கட்சி மட்டும்தான். தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். அவர்கள் நினைத்தால் யாரையும் ஆட்சியில் அமர்த்த முடியும். எங்கள் ஆட்சியில் பெண்களுக்கு சம பங்கு கொடுக்கப்படும். எங்களுக்கு வரும் கூட்டம் காசு கொடுத்து வரும கூட்டம் அல்ல எங்கள் கூட்டம். இன்றைய காலகட்டத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியாது என்ற காரணத்தினால் மாற்று அரசியலை முன்னெடுத்து அரசியல் செய்கிறோம். ஒ.பி.எஸ் பேசும் போது ஆண் | பெண் பாதி பாதி ஆண்டுகள் ஆட்சி அமைப்பது பற்றி பேசினார். எங்கள் கட்சியில் பல திறமையுள்ள பெண்கள் இருக்கிறார்கள்
தயவுசெய்து இளைஞர்களுக்கு வழி விடுங்கள். யார் இளைஞராக இருந்தாலும் அவர்களுக்கு வழி விடுங்கள். இளைஞர்களுக்கு வழிவிட்டால் நாடு முன்னேறும். தமிழகத்தை சீரமைக்கும் இந்த பணியில் பெண்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். விவசாயிகள் என்ற சான்றிதழ் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கொடுக்கப்படும் என ஆட்சிக்கு வந்தால் சட்டம் இயற்றப்படும்”என கமல்ஹாசன் பேசினார்.