‘மதுவால் மாண்டுபோன ஆண்கள்’: இளம் விதவைகள் அதிகம் உள்ள ஊர்

‘மதுவால் மாண்டுபோன ஆண்கள்’: இளம் விதவைகள் அதிகம் உள்ள ஊர்
‘மதுவால் மாண்டுபோன ஆண்கள்’: இளம் விதவைகள் அதிகம் உள்ள ஊர்

புதுச்சேரி மாநிலத்திலுள்ள மேலையூர் அதிக இளம் விதவைகள் கொண்ட கிராமமாக மாறி வருகிறது. அதற்குக் காரணம் தடையின்றி கிடைக்கும் ‘மது அரக்கன்’ என்கிறார்கள் கிராம மக்கள்.

மதுவுக்கு பெயர் போன ஊர் புதுச்சேரி. இந்த ஊரிலேதான் மதுவால் பல இளம்பெண்கள் கணவரை இழந்து இளம் விதவைகளாக மாறியுள்ளனர். காரைக்கால் அருகேயுள்ள மேலையூர் கிராமத்தில் 150 குடும்பங்கள் உள்ளன. அதில், 80க்கும் அதிகமானோர் மது அரக்கனின் கோரப் பசிக்கு தங்கள் கணவரை இழந்து இளம் விதவைகளாக தவித்து வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கணவர் உயிரிழந்த பிறகு, பிள்ளைகளை வளர்க்க முடியாமல் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர் இந்த கிராமத்துப் பெண்கள்.

ஏற்கனவே குடிக்கு அடிமையாகக் கிடக்கும் ஆண்களைத் திருத்த முடியாமல் தவித்துவரும் நிலையில், மேலையூரை குறிவைத்தே பல மதுபானக் கடைகள் திறக்கப்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர் இங்குள்ள பெண்கள். குடும்பத்து ஆண்களை இழந்துவிட்டு, அடுத்த வேலை உணவுக்கே பிறரை எதிர்ப்பார்த்திருக்கும் நிலையில் தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என மேலையூர் கிராமத்துப் பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இளம் விதவைகளை கணக்கெடுத்து, அவர்கள் படிப்புக்கேற்ற பணி வழங்க புதுச்சேரி அரசு முன்வர வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com