\
‘சரவணபவன்’ ராஜகோபால் மரணம் குறித்து வழக்குப்பதிவு

‘சரவணபவன்’ ராஜகோபால் மரணம் குறித்து வழக்குப்பதிவு

‘சரவணபவன்’ ராஜகோபால் மரணம் குறித்து வழக்குப்பதிவு
Published on

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் மரணம் குறித்து விசாரிக்க புழல் சிறை துறை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்தபோது  மரணம் நிகழ்ந்திருப்பதால் புழல் சிறைத் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் ராஜகோபால் நீதிமன்ற காவலில் இருந்த போது  மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் பிரிவு 176 விதியின் படி விசாரணை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். 

புகார் மனுவை பெற்றுக்கொண்ட புழல் காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் இந்த மரணம் தொடர்பாக விசாரணை செய்வார் என அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையின் உள்ள ராஜகோபாலின் சடலம் சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com