தென்காசி மசூதி அமைந்துள்ள இடத்தில் உயர்நீதிமன்ற குழுவினர் ஆய்வு

தென்காசி மசூதி அமைந்துள்ள இடத்தில் உயர்நீதிமன்ற குழுவினர் ஆய்வு

தென்காசி மசூதி அமைந்துள்ள இடத்தில் உயர்நீதிமன்ற குழுவினர் ஆய்வு
Published on

நெல்லை மாவட்டம் தென்காசியில் பள்ளிவாசல் இடப்பிரச்னை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் குழு 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடத்தியது.

நெல்லை மாவட்டம் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு எதிரே உள்ள கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் ஆக்கிரமித்து பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், இதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் ஒன்று கட்டுவதற்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் அனுமதி கேட்டனர்.

இரு தரப்பிலும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சார்பில் கட்டிடத்தை அளக்கவும் இடத்தை அளந்து ஆய்வு செய்யவும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட இடத்தை மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் ஆணையர்களான நிரஞ்சன், ரகுவரன் கோபாலன், கார்த்திக், காஜா மொகைதீன், முனிசிபல் வழக்கறிஞர் அதிவீரபாண்டியன், ராஜா மற்றும் தலைமை சர்வேயர் ஆனந்த் சேகர், சர்வேயர் சரவணன் ஆகியோர் அடங்கிய 10 பேர் குழு மற்றும் கோவில் நிர்வாகதினர் சம்பந்தபட்ட இடத்தை சுமார் 5 மணி நேரமாக அளந்து குறித்து கொண்டனர்.

இந்த கட்டடத்தின் அளவுகள் குறித்த அறிக்கை மற்றும் தன்மை குறித்தும் ஆய்வு செய்து மதுரை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளனர். அதனால் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் பகுதி பஜார் தெரு முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் சுமார் 5 மணி நேரமாக பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com