
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு கிராமத்தில் பழங்குடியினர் காலனியில் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடியின மக்களிடம் தேன் வாங்குவதற்காக யூடியூப் சமையல் பிரபலங்களான டாடி ஆறுமுகம், சிவகண்ணன், சம்பத்கான் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் தங்களுக்கு பிரியாணி சமைத்து தரும்படி பழங்குடியின மக்கள் கேட்டிருக்கின்றனர்.
இதையடுத்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக பழங்குடியினர் குடியிருப்பிலேயே சிக்கன் பிரியாணி சமைக்கும் பணியில் அவர்கள் உடனடியாக ஈடுபட்டனர்.
சுமார் ஒருமணி நேரத்துக்கு மேல் அவர்கள் சமையல் செய்தனர். அப்போது பிரியாணியை தம் போடும்போது அங்கு பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பிரியாணியை தயார் செய்தனர்.
சமைத்த சிக்கன் பிரியாணியை பழங்குடியின மக்கள் வாங்கி சாப்பிட்டதோடு வீட்டிற்கும் எடுத்துச் சென்றனர். பழங்குடியின மக்கள் கேட்டதால் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுடச்சுட சட்டென சிக்கன் பிரியாணி சமைத்து கொடுத்தது, அங்கிருப்போரிடையே பாராட்டையும் அன்பையும் பெற்றது!